நாடி ஜோதிடம் என்பது ஆன்மாவின் பயணத்தில் ஒளியை வீசும் ஒரு பண்டைய விஞ்ஞானமாகும் மேலும் உங்கள் கடந்தகால நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் புரிந்து கொள்ள உதவுகிறது இது நாடி ஜோதிடம் என்று அறியப்படுகிறது தனி நபரின் கட்டை விரல் ரேகை மூலம் நாடி ஜோதிடம் அடையாளம் காணப்படுகிறது இந்தியாவின் பண்டைய கால ரிஷிகளும் முனிவர்களும் நமது விதிகளை பனை ஓலையில் எதிர்கால கணிப்புகளாக எழுதியுள்ளனர் தனி நபர் வாழ்க்கையின் நன்மை தீமைகள் பற்றி ஓலைச்சுவடி யின் மூலம் விரிவாக வாசிப்பதன் மூலம் வழி நடத்தப்படுகிறார்கள் மனித குலத்தின் வரவிருக்கும் தலைமுறைக்கு வழிகாட்ட முனிவர்கள் அவர்களின் கடும் தவம் வலிமை மூலம் பெற்ற மாபெரும் ஞானத்தினாள் மனித குலத்தின் மீது உள்ள பற்றுதலால் இதனை உருவாக்கினர் மக்கள் தங்கள் ஓலைச்சுவடியின் மூலம் எதிர்கால வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ளவும் ஆன்மாவின் பயணத்தை உணர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது இது உங்கள் கர்மாவிற்கு ஒரு நுண்ணறிவைத் தருகிறது இதன் மூலம் உங்கள் வாழ்க்கையை சரியான திசையில் அமைத்து கொள்ள முடியும்